கன்னடத்தில் பவன்குமார் என்பவர் ஆயிரம் தயாரிப்பாளர்களிடம் 60 லட்சம் ரூபாயை வசூலித்து எடுத்த படம்தான் லூசியா. அங்கு தாறுமாறாக ஓடிய இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஆவலில் அதன் ரீமேக் உரிமையை கேட்க சென்றபோதுதான், ஏற்கனவே சி.வி.குமார் என்பவர் வாங்கி விட்டார் என்ற விவரம் சித்தார்ததுக்கு தெரிய வந்திருக்கிறது.
நல்லவேளையாக அவரும் சித்தார்த்தின் நண்பர் என்பதால், எந்தவித சிரமமும் இன்றி உடனே அதில் கமிட்டாகி தற்போது நடித்தும் முடித்து விட்டார் சித்தார்த். எனக்குள் ஒருவன் என்ற அந்த படத்தில் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் தீபா சன்னதி என்ற கன்னட நடிகையே தமிழிலும் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் பிரஸ்மீட்டுக்காக வந்தபோது, கவர்ச்சியை வாரி வழங்கியபடி டிரஸ் அணிந்திருந்த தீபா, நிகழ்ச்சி முடிகிறவரை தனது உடையை இழுத்து மறைப்பதற்கே நேரத்தை செலவிட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வேளையில், சித்தார்த் பேசும் நேரம் வந்தபோது தீபா சன்னதியைப்பற்றியும் கொஞ்சம் விரிவாக பேசினார். கன்னடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தெரியாது என்றாலும் ஒரே படத்தில் ஓரளவு தமிழ் பேசவும் கற்றுக்கொண்டார். அதோடு, ஒவ்வொரு நாளும் தனக்கான டயலாக் பேப்பரை மனப்பாடம் செய்து விட்டு வந்து நடித்தார். அந்த அளவுக்கு நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் அவரது நடிப்பும் பேசப்படும் என்று சொன்ன சித்தார்த், இந்த படத்தில் நான்தான் ரெண்டு வேடம் என்றாலும், நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே டபுள் ரோல்தான். அது இப்படம் திரைக்கு வரும்போது தெரியும் என்றார்.

cinema, siddhrath, Luciya, deepa sannidhi, c.v.kumar, enakkul oruvan