லட்சுமி மேனன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லட்சுமி மேனன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

லட்சுமி மேனன் இல்லாமல் விஷாலா?...

'பாண்டிய நாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் - விஷால் - லட்சுமி மேனன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவார்கள் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால், நேற்று விஷால் ஜோடியாக அந்தப் படத்தில் காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார் என்ற தகவல் பரவியது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க லட்சுமி மேனன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம். அப்படியிருக்க தற்போது திடீரென நாயகியை மாற்றிவிட்டார்களா, அல்லது படத்தில் இரண்டு நாயகிகளா என்பது சஸ்பென்சாகவே உள்ளது.
விஷால் - லட்சுமி மேனன் இருவரும் 'பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களில் இதற்கு முன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் அதிகம் வெளிவந்தாலும் இருவரும் அதைப் பற்றிப் பெரிதாகப் பேசியதில்லை.

மனதுக்கு பிடித்த ஹீரோக்களுடன் நடிக்க விரும்பும் லட்சுமி மேனன்.

இதுவரை கதையும், கேரக்டரும் பிடித்தால் போதும் என்று நடித்து வந்த லட்சுமி மேனன், இப்போது, ஹீரோக்களும் தனக்கு பிடித்தமானவர்களாக இருக்க வேண்டும் என, கண்டிஷன் போடத் துவங்கியுள்ளார். இதுவரை, இரண்டாம் வரிசை ஹீரோக்களுடன் நடித்து வந்த
அவருக்கு, இப்போது முன்னணியில் இருக்கும் மாஸ் ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளது. அதனால், வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களை தவிர்க்கும் அவர், முன்னணி ஹீரோக்களை இயக்கியிருக்கும் டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். முன்னணி ஹீரோக்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக, அவர்கள், தன்னை கவர்ந்த விதங்களை பட்டியல் போட்டு, பேட்டி கொடுத்து வருகிறார், லட்சுமி மேனன்.

லட்சுமி மேனனின் பாட்டு ஆர்வம்!

கோலிவுட்டின் ஹிட் லிஸ்ட் நடிகை பட்டியலில் இருப்பவர் லட்சுமிமேன்ன. ஆனால் சித்தார்த்துடன் நடித்த ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் சரிந்து விட்டது போன்ற நிலை உருவாகியிருக்கிறது. இதனால் சித்தார்த்துடன் நடித்த ராசி லட்சுமிமேனனின் மார்க்கெட் படுத்து விட்டதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால், இதுபற்றி லட்சுமிமேனனைக்கேட்டால், ஜிகர்தண்டா படத்தில் நடித்து வந்தபோது மலையாளத்தில் அவதாரம் உள்பட இரண்டு படங்களில் நடித்து வந்தேன். இதில் அவதாரம் ரிலீசாகி விட்டது. அதையடுத்து இன்னொரு படத்தில் நடித்து வந்தேன். அதனால் தான் தமிழ்ப்படங்களுக்கு கால்சீட கொடுக்க முடியவில்லை என்கிறார்.

இந்திக்குப் போகும் ஜிகர்தண்டா...!

'பீட்சா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த 'ஜிகர்தண்டா' படம் சமீபத்தில் வெளியாகி நன்றாக ஓடி வருகிறது.

தனது முந்தைய படத்திற்குக் கிடைத்த பாராட்டைப் போலவே இந்தப் படத்திற்கும் பாராட்டுக்களை அள்ளி வருகிறார். ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும் மறுபக்கம் திரையுலகத்தைச் சேர்நத்வர்கள் படத்திற்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். மணிரத்னத்தின் உதவியாளரான சித்தார்த், இயக்குனர் ஷங்கரால் 'பாய்ஸ்' படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமி மேனனின் அடுத்த இலக்கு!..

எந்தவித எதிர்பார்ப்புகளோ, கனவுகளோ இல்லாமல், சினிமாவுக்குள் நுழைந்தவர் லட்சுமி மேனன். ஆனால், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன்
நடித்து விட்டார்.

இதுபற்றி அவரைக் கேட்டால், 'நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போதே நடிக்க வந்து விட்டதால், பெரிய கனவுகளோடு சினிமாவுக்குள் வரவில்லை என்பது உண்மை தான். ஆனால், இப்போது முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்ட பின், இன்னும் மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதோடு, லட்சுமி மேனன்
என்றாலே, ஹோம்லியான நடிகை என்றொரு இமேஜ் இருந்த போதும், கதைக்கேற்ப மாடர்னாக நடிக்கவும், இப்போது ரெடியாகி விட்டேன்' என்கிறார். அவரது அடுத்த இலக்கு விஜய், அஜீத் தானாம். கூடிய சீக்கிரமே அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருக்கிறார், லட்சுமி.

லட்சுமி மேனனின் சங்கீத பின்னணி

ஸ்ருதி ஹாசன், ரம்யா நம்பிசனைத் தொடர்ந்து, லட்சுமி மேனனும், சினிமாவில் பின்னணி பாட ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு, தான் சந்திக்கும் இசையமைப்பாளர் களிடம் சிலரைப் போன்று சினிமா பாட்டு பாடி சான்ஸ் கேட்காமல், கர்நாடக சங்கீத பாடல்களான கீர்த்தனைகளை பாடிக் காட்டுகிறாராம் லட்சுமி மேனன். இதுபற்றி அவர் கூறுகையில், 'நான்காம் வகுப்பில் இருந்தே, முறைப்படி சங்கீதம் பயிலத் துவங்கி விட்டேன். அதனால், வர்ணம், கீர்த்தனை புத்தகத்தில், பாடங்களில் எதை பாடச் சொன்னாலும் சரளமாக பாடுவேன். எனக்கு சங்கீத பாடம் நன்றாக தெரியும் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவே, கர்நாடக சங்கீத பாடங்களை பாடி காட்டுகிறேன்' என்கிறார்.