'பீட்சா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த 'ஜிகர்தண்டா' படம் சமீபத்தில் வெளியாகி நன்றாக ஓடி வருகிறது.
தனது முந்தைய படத்திற்குக் கிடைத்த பாராட்டைப் போலவே இந்தப் படத்திற்கும் பாராட்டுக்களை அள்ளி வருகிறார். ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும் மறுபக்கம் திரையுலகத்தைச் சேர்நத்வர்கள் படத்திற்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். மணிரத்னத்தின் உதவியாளரான சித்தார்த், இயக்குனர் ஷங்கரால் 'பாய்ஸ்' படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிலும் 'ஜிகர்தண்டா' , 'சிக்கடு தொரகடு' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அறிந்த இந்தி தயாரிப்பு நிறுவனம் ஒன்று படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேசி வருகிறதாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பீட்சா' படமும் ஹிந்தியில் ரீமேக்காகி கடந்த மாதம் வெளியானது. ஆனால், படம் தோல்வியைத் தழுவியது. பொதுவாக, இந்தியில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ஹாரர் படங்களே தோல்வியைத் தழுவும் நிலையில், அறிமுகமில்லாத நட்சத்திரங்கள் நடித்த 'பீட்சா' படம் தோல்வியைத் தழுவியதில் ஆச்சரியமில்லை என்கிறார்கள் பாலிவுட்டினர்.
இந்த சூழ்நிலையில் 'ஜிகர்தண்டா' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான் என்றாலும், முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்தால் மட்டுமே வெற்றியை சுவைக்கலாம் என்கின்றனர்.

Cinema, siddharth, lakshmi menon, jigarthanda film, jigarthanda to be remake in hindi