மிளகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மிளகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மிளகின் இயற்கை வைத்தியம்.

மிளகு ஒரு கொடி இனத் தாவரம். இது படர கொழு, கொம்பு, மரம் தேவை. இதன் பழங்களை உலர வைத்து கருமிளகும், வெண்மிளகும் தயாரிக்கப்படுகின்றன. பழுக்காத காய்களை உலர வைத்து கருமிளகும், பழுத்த பழங்களை நனைய வைத்து, மேல் தோலை நீக்கி, வெண் மிளகும் எடுக்கப்படுகின்றன. சரித்திர வரலாற்றின் படி, உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான வாசனை திரவியம் மிளகு. வருடத்திற்கு 75,000 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆபத்தான புற்றுநோயை தடுக்கும் மிளகு.

உணவுப்பொருளில் காரத்துக்காக  சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு. அது பல அரிய மருத்துவ குணங்களையும் கொண்டது. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்…

• மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின்படி மார்பகப்புற்றுநோய் மற்றும் புற்றுக் கட்டிகள் வளர்ச்சியை மிளகு தடுக்கிறது.  மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

* சருமப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.