நாகரீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாகரீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒழுக்கமான உடை அவசியம்.

சமுதாயத்தில் ஒரு காரியத்தை ஆண் செய்து விட்டால், அதை ஒரு சம்பவமாக நினைத்து தாண்டி போகும் பட்சத்தில், ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம் கூட, ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் கரும் புள்ளியாக பதிவாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது. ஒரு குடும்பத்தின் வேரும், அந்த குடும்பம் என்ற வாகனத்தை, சரியான பாதையில் நடத்திச் செல்லும் ஓட்டுனரும் பெண் தான்.

படிப்பறிவு இல்லாத காலத்திலேயே, பெண்கள் தங்கள் குடும்பத்தை திறம்பட நடத்தி, தங்கள் திறமையை நிலை நாட்டினர். ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வையும், அவர்கள் குடும்பத்தை நடத்துவதால் ஏற்படுகிற அனுபவத்தினாலேயே தெரிந்து, புரிந்து ஜெயித்துக் காட்டினர்.