சுனைன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுனைன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விஜயசேதுபதிக்கு நல்ல தீனி போட்டிருக்கிறேன்! - வன்மம் டைரக்டர் ஜெயகிருஷ்ணா

கமல்ஹாசன், ஆர்.கே.செல்வமணி என பலரிடத்தில் கடந்த 25 வருடங்களாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் டைரக்டர் ஜெயகிருஷ்ணா. இவர் இயக்கியுள்ள வன்மம் படத்தில் விஜயசேதுபதி-கிருஷ்ணா- சுனைனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இப்படம் பற்றி டைரக்டர் ஜெயகிருஷ்ணா கூறும்போது, இன்றைக்கு அப்டேட்டில் இருக்கும் இரண்டு ஹீரோக்கள் என் இயக்கத்தில் நடித்திருக்கிறார்கள் என்றால், எனது ஸ்கிரிப்ட் அவர்களுக்கு மிகவும் பிடித்ததுதான் காரணம். இந்த வன்மம் படத்தின் கதை நட்பு, காதல், எமோஷன், காமெடி, செண்டிமென்ட் என அனைத்து விசயங்களும் கலந்தது.

நடிகைகளை கலாய்க்கும் கழுகு கிருஷ்ணா!

கழுகு படத்தில் நடித்த கிருஷ்ணாவின் மார்க்கெட் யாமிருக்க பயமேன் படத்தின் வெற்றிக்குப்பிறகு சூடு பிடித்திருக்கிறது. அதனால் வன்மம் படத்தில் விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்த அவர், தற்போது யட்சன் படத்தில் ஆர்யாவுடன் நடித்து வருகிறார். இந்த படத்தை கிருஷ்ணாவின் அண்ணனான டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.

இதில் வன்மம் படப்பிடிப்பு நடந்தபோது தனக்கு ஜோடியாக நடித்த சுனைனாவை அவ்வப்போது கிண்டல் செய்து கொண்டேயிருந்தாராம் கிருஷ்ணா. அதனால் அவரது தலையை கண்டாலே தெறித்து ஓடிக்கொண்டிருந்த சுனைனாவை, கேமரா முன்பு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம். இயக்குனருக்கு. அந்த அளவுக்கு அம்மணியை கலாய்த்து எடுத்து விட்டாராம்.