சுனிதி சௌகான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுனிதி சௌகான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.5 கோடி ரூபாய் செலவில் செல்ஃபி புள்ள பாடல் காட்சி

கத்தி படத்துக்காக, அனிருத் இசையமைப்பில் விஜய், சுனிதி சௌகான் பாடிய 'செல்ஃபி புள்ள...' பாடலின் ஒலிப்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இப்பாடலை லண்டனுக்குச் சென்று படம் பிடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

ஆனால், படப்பிடிப்பு குழுவினருக்கு லண்டன் செல்வதற்காக விசா வாங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் லண்டன் செல்லும் முடிவை கைவிட்டனர். செல்ஃபி புள்ள... பாடலை வேறு எங்கு படமாக்குவது என்று நடைபெற்ற பரிசீலனையில் ஹைதராபாத்தில் செட் போட்டு பாடலை எடுக்க முடிவு செய்தனர். பின்னர் அந்த முடிவையும் மாற்றிக்கொண்டு, மும்பையில் 2.5 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைத்து படமாக்க முடிவெடுத்தனர்.