சமையலறை குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையலறை குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வீட்டை சமையலறை பொருட்களை கொண்டும் சுத்தம் செய்யலாம்.

இயற்கையான பொருட்களை கொண்டு மிக எளிதாக வீட்டை சுத்தம் பண்ணலாம். இயற்கையான பொருட்களை வைத்து செய்வதால் அனைத்து பொருட்களும் பளிச்சென்று இருப்பதுடன், நறுமணமத்துடனும் இருக்கும்.

* சில்வர் பொருட்களை வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதனைக் கொண்டு பாத்திரத்தை தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.
* துருப்பிடித்த இரும்பு பொருட்களில், உருளைக்கிழங்கை கொண்டு தேய்தாலே விரைவில் போய்விடும்.

மாவு பிசைகிறவர்களுக்கு சில பயனுள்ள குறிப்புகள்.

காலம் எவ்வளவு மாறினாலும் பூரி மற்றும் சப்பாத்தி விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகமானோர் இருக்கவே செய்கின்றனர். பப்படம், தந்தூரி ரொட்டி, சமோசா, பாதுஷா போன்ற மாவுப் பதார்த்தங்களும் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு மாவு பிசையும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதுமானது. அதற்கான சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பயனுள்ள சமையலை குறிப்புகள்.

உணவை சமைக்கும் போது உப்பையும் காரத்தையும் அளவு தெரியாமல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சேர்த்து போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும்.ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.

காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்பதால் பலரும் வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக் கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும்.

தெரிந்துகொள்ள வேண்டிய சில வீட்டு குறிப்புகள்.

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் அந்நீரினால் முகம் கழுவி விட்டு1 அல்லது 2 மணித்தியாலங்கள் கழித்து சாதாரண நீரில் முகம் கழுவினால் முகத்தில் உள்ள பரு,பருவின் தழும்புகள் மாறிவிடும்.(இந்நீரினால் எந்நேரமும் கழுவலாம்,ஒருநாள் விட்டு ஒருநாள் கழுவினால் சீக்கிரமாக பலனை அடையலாம்)

அதேப்போல் இந்த தேங்காய் தண்ணீரை வீசாமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

சமையலறைக்கு சில எளிய குறிப்புகள்.

சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் சுவையாக இருக்கும்.

பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

 கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.