ஓவியக்கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓவியக்கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மும்பையில் ஓவியக்கண்காட்சி நடத்தும் ஹன்சிகா!

ஹன்சிகாவை வெறும் நடிகையாக மட்டும் அறிந்திருப்பவர்களுக்கு அவரது மறுபக்கம் நிச்சயம் ஆச்சர்யம் தரும். அடிப்படையில் சேவை மனப்பான்மை கொண்டவர் ஹன்சிகா. எனவே தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போது தன்னால் முடிந்த அளவுக்கு குழந்தைகளை தத்தெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது 25க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து பராமரித்து வருகிறார் ஹன்சிகா.

இரண்டு தினங்களுக்கு முன், அதாவது ஆகஸ்ட் 9 அன்று நடிகை ஹன்சிகாவுக்குப் பிறந்தநாள். இந்த வருடப் பிறந்தநாளுக்கும் 5 குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுக்கப்போவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வந்தன. அதன்படியே தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் 5 குழந்தைகளை தத்தெடுத்தார்.