ஹன்சிகாவை வெறும் நடிகையாக மட்டும் அறிந்திருப்பவர்களுக்கு அவரது மறுபக்கம் நிச்சயம் ஆச்சர்யம் தரும். அடிப்படையில் சேவை மனப்பான்மை கொண்டவர் ஹன்சிகா. எனவே தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போது தன்னால் முடிந்த அளவுக்கு குழந்தைகளை தத்தெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது 25க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து பராமரித்து வருகிறார் ஹன்சிகா.
இரண்டு தினங்களுக்கு முன், அதாவது ஆகஸ்ட் 9 அன்று நடிகை ஹன்சிகாவுக்குப் பிறந்தநாள். இந்த வருடப் பிறந்தநாளுக்கும் 5 குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுக்கப்போவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வந்தன. அதன்படியே தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் 5 குழந்தைகளை தத்தெடுத்தார்.
இந்த 5 குழந்தைகளையும் சேர்த்தால் மொத்தம் 30 குழந்தைகள் ஹன்சிகாவின் பராமரிப்பில் வளர்கின்றன. அந்த குழந்தைகளுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வியையும் தன் சொந்த செலவில் செய்து கொடுத்து வருகிறார் ஹன்சிகா. இதற்காக தன் வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்கி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கத் தொடங்கியதிலிருந்து இப்போது வரை தனிப்பட்டமுறையில் தன் வருமானத்திலிருந்தே செலவு செய்து வரும் ஹன்சிகா, விரைவில் இதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஹன்சிகா குழந்தைகள் அறக்கட்டளை என்ற அமைப்பை பதிவு செய்துள்ளாராம். இனி இந்த அறக்கட்டளை மூலமே அனைத்து சேவைகளையும் செய்ய இருக்கிறார்.
ஓவியம் வரைவதிலும் சிறந்தவரான ஹன்சிகா, ஏராளமான ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் வரைந்த ஓவியம் ஒன்று ரூ.15 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. இதனையடுத்து தான் வரைந்த ஓவியங்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் வரும் பணத்தையும் இந்த குழந்தைகள் அறக்கட்டளைக்கு செலவிடப்போகிறாராம். இதற்காக மும்பையில் ஓவியக்கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.

Cinema,Actres hanshika, Art Exhibition