புதிதாய் மடிக்கணணி வாங்க போகும்போது கவனிக்க வேண்டியவை.

நீங்கள் புதிதாக மடிக்கணணிவாங்கும் கணனி பற்றிய சில அறிவோடு வாங்க வேண்டுமே தவிர காசை வீணாக செலவு செய்து ஒரு மடிக்கணணியை வாங்கி காசை விரயமாக்க வேண்டாம்.அவற்றில் சில,

சேவை மையம்:
பல மடிக்கணணி விற்கும் விற்பனையாளர்கள் சர்வீசிங் செய்து தருவது இல்லை. அங்கீகாரம் பெற்ற சேவை மையம் எங்கு உள்ளது என விசாரித்து தெரிந்து கொள்ளவும்.
எடை:
தாங்கள் அடிக்கடி பயணம் செய்பவர் என்றால் எடை குறைந்த அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். எடை குறையக்குறைய விலை அதிகமாகும். ஒருவேளை எடை அதிகமான லேப்டாப்பை வாங்கி இருந்தால் அதை வீட்டிலே வைத்துவிட்டுச் செல்லவும்.

வெப்பம்:
தாங்கள் வாங்க நினைக்கும் மடிக்கணணி வெப்பம் உமிழும் என நன்கு தெரிந்துகொண்டு வாங்கவும்.

விலை மலிவு என, சரியான கட்டமைப்பு இல்லாத மடிக்கணினி வாங்குவது தங்களின் தொடைக்கு தோசைக்கல் வாங்குவது போன்றது.

நினைவகம்:
பல நிறுவனங்கள் குறைந்தது 2 ஜிபி நினைவகம் உள்ள மடிக்கணணிகளை அவை 4ஜிபி யாக எதிர்காலத்தில் உயர்த்திக்கொள்ளும் வசதி படைத்ததாஎன விசாரித்து வாங்கவும்.

மின்கலம்:
முடிந்தால் 9-ஸெல் மின்கலம் வாங்க முயற்சிக்கவும். தங்களின் கணணிப் பயன்பாடு அதிகம் என்றால் 2 மின்கலங்களை வாங்கவும். நெடும் பயணத்தின் போது அவை பெரிதும் பயன்படும்.

ஆயுள்:
ஒரு மடிக்கணணி முதல் 3 ஆண்டுகள் சிறப்பாக உழைக்கும். ஆனால் எந்தக் கம்பெனியும் ஒரு வருடத்திற்கு மேல் உத்தரவாதம் தருவது இல்லை.

விலை:
20000 ரூபாய் முதல் லேப்டாப் கிடைக்கிறது. ஆனால் நினைவிருக்கட்டும், மடிக்கணணியை விலை குறையக்குறைய தரம் மற்றும் வேகம் குறைவாக இருக்கும்.

அளவு:

பெரிய திரை இருப்பது தான் பெருமை என நினைத்து பலர் கங்காரு போல் பெரிய லேப்டாப்பை மடியில் சுமந்து இருக்கிறார்கள்.லேப்டாப் அளவு சிறியதாக இருக்கும்போது எடுத்துச்செல்வது எளிதாகும்.

கவனிக்கப்படவேண்டிய தொழில்நுட்ப அம்சங்கள்:
1. Dual Core or Quad Core  Processor
2. 2GB DDR2 RAM is Minimum
3. 160GB or 250GB HDD
4. Bluetooth
5. WiFi
6. Memory Card Reader Slot
7. Webcam
8. DVD RW Drive