அழகு சாதன பொருட்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகு சாதன பொருட்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மேக்கப் பொருட்களில் உள்ள ஆபத்துக்கள்.

சுவாச பிரச்சனைகள் 
முகத்திற்கு போடும் பவுடரில் உள்ள கனிமங்களை தொடர்ந்து சுவாசித்தால்அவை நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே நல்ல நறுமணம் உள்ளது என்று பவுடரை நிறைய பூசிக் கொள்ளாதீர்கள். இதனால் சுவாச பிரச்சனைகள் மட்டுமின்றிதலைவலியும் அதிகம் ஏற்படும்.

புற்றுநோய் 
ஷேவிங் க்ரீம் மற்றும் மாய்ஸ்சுரைசர்களில் பாராபீன் என்னும் பதப்படுத்தும் பொருள் உள்ளது. ஆகவே இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போதுமார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றிசரும புற்றுநோயும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

சமையலறை அழகு சாதன பொருட்கள்.

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை.
அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்துக்கும் உடலுக்கும் போட வேண்டிய அவசியமில்லை.அன்றாடம் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக பயன்படுகின்றன.

ஆலிவ், தேங்காய் எண்ணெய்
ஆலிவ் ஆயிலை முகத்தில், கை, கால்களில் பூசி வர சருமம் பள பளப்பாகும். தேங்காய் எண்ணெயும், பொலிவிற்கு ஏற்றது.