அழகான கால்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகான கால்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அழகான கால்கள்.

அதிகமாக வெயிலிலேயே நடப்பவர்கள் வெயில் கால்களில் படுவதால், கால்கள் வறண்டு விடுகிறது. மேலும் கால்களில் உள்ள எண்ணெய் பசையையும் வெயில் உறிஞ்சிவிடுவதோடு, கால்களும் மென்மையை இழந்துவிடும்.

ஆகவே கால்களை எப்போதும் அழகாக பராமரிக்க பணத்தை செலவழிக்காமல், வீட்டிலேயே ஒரு ஸ்பா போன்று ரெடி செய்து கால்களை பராமரிக்கும் முறை உள்ளது.

அழகான கால்களை பெற

மருதாணி இலை, துவரம் பருப்பு என்பவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூச பித்த வெடிப்பு குறையும்.
நல்லெண்ணையை காலில் தேய்த்து கழுவிவர கால்கள் அழகாகும்.

நகங்களை வெட்டும் முன் நகத்தின் மீது எண்ணையை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து வெட்டினால் அழகாகவும் விரும்பும் வடிவத்திலும் வெட்ட இயலும். சந்தன பொடி, கடலை மாவு, வெள்ளரிச்சாறு முன்றையும் சம அளவில் கலந்து முகம்,கை,கால்களுக்கு பூசி வர பிரகாசமாகும்.