அல்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அல்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பீட்ரூட் அல்வா செய்முறை.

தேவையான பொருள்கள்:

அரை டம்ளர் பால்,
இரண்டு பெரிய அளவு பீட்ரூட்
சர்க்கரை 100 கிராம் (ருசிக்கேற்ப சர்க்கரையைக் கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.
நெய் 50 கிராம்,
தேவைக்கேற்ப உலர்ந்த திராட்சை,முந்திரி  தலா

செய்முறை:
பீட்ரூட்டை துருவிஅதை பாலில் வேக விடவும்.பீட்ரூட் வெந்து பால் ஈர்த்துக் கொண்டதும் அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். பீட்ரூட் அல்வா பதத்துக்கு வெந்ததும் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போடவும். நன்றாகக் கிளறி இறக்கவும். இலகுவானதும் சுவையானதுமான பீட்ரூட் அல்வா ரெடி.

பப்பாளி அல்வா செய்முறை.

பால் - 1 கப்
பப்பாளிப்பழம் (துண்டுகளாக வெட்டியது) - 2 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
நெய - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் அரிசி மாவைப் போட்டு இலேசாக வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.

சுவைமிகுந்த ஆப்பிள் அல்வா.

தேவையான பொருட்கள்.

நெய் - 3 முதல் டேபிள்ஸ்பூன்
சிவப்பு ஆப்பிள் - 3
சர்க்கரை - ஒன்றரை கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது

செய்முறை:

ஆப்பிளை நன்கு கழுவி, துடைத்து, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

இலகுவான கேரட் அல்வா.


தேவையான பொருட்கள்.

கேரட்  துருவியது – 1 1 /2 கிலோ
பால் – 1  லிட்டர்
சர்க்கரை – 1  கப்
நெய் – 3 /4 கப்
ஏலக்காய் தூள் – 1 1 /2 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 1 /4 கப்
முந்திரி பருப்பு(இரண்டாக உடைத்தது ) – 1 /4 கப்

செய்முறை.

மாம்பழ அல்வா செய்முறை.

தேவையான பொருட்கள்.

நெய் – 1 தே‌க்கர‌ண்டி
மா‌ம்பழ‌ம் – 2
பால் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏல‌க்கா‌ய் – 2

செ‌ய்முறை.

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

சுவையான அன்னாசி அல்வா.


தேவையான பொருட்கள்.

சர்க்கரை    -    ஒன்றரை கிலோ
நெய்    -    300 கிராம்
மைதா    -    300 கிராம்
நன்கு பழுத்த
அன்னாசி    -    பாதி
முந்திரி    -    50 கிராம்
                                                      ஏலக்காய் தூள்    -    சிறிதளவு
                                                      உணவு மஞ்சள்- சிறிதளவு.

அன்னாசி அல்வா செய்யுங்கள்.

அன்னாசிபாதியில் தோல் சீவி 1 சிறிய துண்டு மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மற்றவற்றை மிக்சியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்ததை இன்னும் சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.

மைதா 300 கிராமை நன்கு பிசைந்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஓர் இரவு வைத்திருந்து, மறுநாள் தண்ணீரை வடித்து விட்டு, கீழ்படிந்துள்ள மாவில் மீண்டும் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பாலெடுத்துக் கொள்ளுங்கள்.