அமலாநாகார்ஜூனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமலாநாகார்ஜூனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அமலாவை கிண்டல் செய்த ரஜினிகாந்த்!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகை அமலாவை சினிமாவில் அறிமுகம் செய்தவர் டி.ராஜேந்தர். அவரது மைதிலி என்னை காதலிதான் அமலாவுக்கு முதல் படம்.

அந்த படத்திலேயே தனது கண் அசைவுகளால், அற்புத நடனத்தால் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட அமலா அதையடுத்து மோகன் நடித்த மெல்லத்திறந்தது கதவு படத்தில் நடித்தார். அந்த படமும சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் அதையடுத்து கோலிவுட்டின் முக்கிய நடிகையாகி விட்டார் அமலா.

ரஜினியுடன் வேலைக்காரன், கொடி பறக்குது, மாப்பிள்ளை, கமலுடன் பேசும் படம், சத்யா, வெற்றி விழா என ஹிட் படங்களாக நடித்தபோது அவர் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. அதோடு, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் அப்போதில் இருந்தே விலங்குகளிடம் அன்பு காட்டி வந்தாராம் அமலா.