அதிசய உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிசய உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மர்மமாக உருவாகும் பயிர் வட்டங்கள்.

பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான்.
பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது.

இரவுப்பொழுதில் வெளிச்சம் இல்லாமல் சுற்றியிருக்கும் பயிருக்கு எந்தவொரு சிறு சேதமும் இல்லாமல் எந்தவொரு வாகனமோ, மனிதக்காலடியோ, இல்லை இயந்திரத்தின் தடயமோ இல்லாமல் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாக்கப்படுவது மர்மத்திலும் மர்மமே.

உயிர் பறிக்கும் "பெர்முடா முக்கோணம்"

அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடாஇவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [சாத்தானின் முக்கோணம்” ]என அழைக்கப்படுகிறது.

அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி.இப்பகுதிக்குள் சென்ற அனேக விமானங்கள்,கப்பல்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின.

ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்..!

வடக்கு ட்ரான்ஸ்வால் பிரதேசத்தில் மெஸ்ஸினா நகருக்குப் போனால், அங்கு பூதம் போல ஊதிய ஒரு மரத்தைப் பார்க்கலாம். இந்தப்பக்கம் வந்த டேவிட் லிவிங்ஸ்டன் இதனை தலைகீழாக நடப்பட்ட கேரட் என்று சொன்னார். இது ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம் பாவோபாப் என்று அழைக்கப்படும் அடன்ஸோனியா டிஜிடாடா (ADANSONIA DIGITATA) இதனை பலர் தாவர உலகின் பிசாசு என்று கூறி வந்திருக்கிறார்கள். 

பாவோபாப் மரங்கள் மிக உறுதியானவை, சட்டென்று இறக்காதவை. பிடுங்கி கீழே தரை மட்டமாகப் போட்டபின்னரும் நீட்ட வாக்கில் சில முறை இந்த மரங்கள் வளர்ந்திருக்கின்றன.மரங்களை வெட்டிச்சாய்த்த பின்னரும், இந்த மரத்தின் வேர்கள் மரத்தின் ஆணி வேரிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவு வரை இருக்கும்.

"ரோஸ் ஏரி" பற்றி உங்களுக்கு தெரியுமா ?

நடுவில் மட்டும் ரோஜா நிறவண்ணத்தைக் கொட்டியதுபோலவும் சுற்றிலும் பச்சைப்பசேல் எனவும்  இருக்கிறதே என்ன இது?
இது தான் மேற்கு ஆஸ்திரேலியாவின் மிடில் ஐலாண்டில் உள்ள ரோஸ் ஏரி. 600 மீட்டர் நீளம்கொண்ட இந்த ஏரி, எப்படி இந்த வண்ணத்தில் உள்ளது என்று விஞ்ஞானிகள் மண்டையை குடைந்து யோசித்தார்கள். சமீபத்தில்தான் இந்த நீரில் குறைந்த ஊட்டச்சத்துகொண்ட பாக்டீரியா உள்ளதாம் அவற்றால்தான் இந்த வண்ணம் என அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார்கள்.