அட்லாண்டிக் கடல்
பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ
தீவு,பெர்முடாஇவற்றின் மும்
முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [” சாத்தானின் முக்கோணம்” ]என அழைக்கப்படுகிறது.
அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி.இப்பகுதிக்குள் சென்ற அனேக விமானங்கள்,கப்பல்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின.
எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு வழியாக திரும்பி விட்டதாக மாலுமி கிறிஷ்டோபர் கொலம்பஸ் தம் அனுபவத்தில் தெரிவித்துள்ளார். மேலும் “நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்” உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள் என இப்பகுதியை வர்ணித்துள்ளார்.
அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி.இப்பகுதிக்குள் சென்ற அனேக விமானங்கள்,கப்பல்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின.
எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு வழியாக திரும்பி விட்டதாக மாலுமி கிறிஷ்டோபர் கொலம்பஸ் தம் அனுபவத்தில் தெரிவித்துள்ளார். மேலும் “நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்” உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள் என இப்பகுதியை வர்ணித்துள்ளார்.
அனேக
பத்திரிக்கையாளர்கள் கடல் ஆராய்ச்சியாளர்கள் பெர்முடா முக்கோணம் 500 ஆண்டுகளாக
இதன் மர்மம் பற்றி கதை கதையாக எழுதியுள்ளார்கள். புத்தகங்கள் எழுதப்படுட்டுள்ளன.
1950 முதல் 1975 குள்ளாக மட்டும் சிறிதும் பெரிதுமாய் 428 கப்பல்கள் மாயமாய்
மறைந்துள்ளன.
பல்வேறுவிதமான
அனுமானங்களும் ஆராய்சிகளும் விடை தெரியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவற்றில்
சில…
கடலினுள்
மூழ்கிப்போன அட்லாண்டிஸ்
ஆர்கியாலஜிஸ்ட் (Edgar
Cayce) எட்கர் கெயிஸ் [1968]
கடலில் மூழ்கி அழிந்து போன அட்லாண்டிஸ் நிலப்பரப்பின் மலை முகடு பெரிய சுவர் போல
பைமினிக்கு அருகில் அதாவது பெர்முடா முக்கோணப் பகுதிக்குள் இருப்பதாக
கண்டுபிடித்தார். பாகாமாஸில் மேலும் பல தடயங்கள் அழிந்து போன அட்லாண்டிஸ் நகரத்தை
பற்றி கூறுகிறது. அட்லாண்டிஸ் நகரத்தில் இருந்தவர்கள் மேலான அறிவு மிக்கவர்கள்
அவர்களிடம் சக்தி மிக்க கிரிஸ்டல் இருந்ததாகவும், இன்னும் இவை தான் சக்தி அலைகளை
பரப்பிக்கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாகவேஏரியா 51 எனும் இபபகுதிக்குள் நுழையும்
எவையும் (விமானம், கப்பல்கள்)
எவ்வித சுவடும் இன்றி மறைந்து விடுவதாக நம்பப்பட்டது.
இப்பகுதி
ஏலியன்ஸ் வந்து போகும் தள மாக செயல்படுவதாகவும் இங்கு எப்போதும் கண்ணுக்கு தெரியாத
அதிக டிராபிக் இருப்பதாகவும் இப்பகுதியில் கடந்த நூற்றாண்டில் மட்டும் 50
கப்பல்களும் 20 விமானங்களும் காணாமல் போன தாகவும் 1000 பேர் கடந்த 500 ஆண்டுகளில்
தொலைந்து போனதாகவும் U.S. நேவி மற்றும்
கடலொர பாதுகாப்பாளர்கள் கூறுகிறார்கள். இந்த பகுதியில் ஒரு நீல நிற பெருஞ்
சுழற்குழிகள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
தற்போதைய
ஆராய்ச்சியாளர்கள் ராப்மெக்கெரிகர், புரூஸ்கெனான் இதையே எலக்ட்ரானிக் சுழற்மேகங்கள் (electronic Fog) என சொல்கின்றனர்.
1945ல ஃப்லைட் 19
எனும் போர்விமானம் வழக்கமான பயிற்சியில் இருக்கும் போது இப்பகுதியில் காணாமல்
போய்விட்டது அதில் 19 பேர்கள் இருந்ததாகவும் இதை தேடி சென்ற 14 பேர் அடங்கிய குழு 5
டார்பிடோக்களும் அதே பாணியில் மறைந்து விட்டதாகவும் ஒரு ரிக்கார்டு இருக்கிறது.
மேலும் இந்த விமானங்கள் செவ்வாய் கிரகத்திற்கு வேற்று கிரக வாசிகளால்
கடத்தப்பட்டிருக்கும் என்ற கற்பனையும் உலவுகிறது.
இப்பெரிய
பரப்பில் நீர்மேல் பகுதிகளிலும் வானப்பகுதிகளிலும் மீத்தேன் வாயுக்கள் அடர்த்தி
அதிகமா இருப்பதால் நீர் பரப்பை மிக லேசாக்கி இதனுள் செல்லும் கப்பல்களை
மூழ்கடித்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது இதற்கான ஆதாரமும் இன்றி இக்கூற்றும்
மறுக்கப்படுகிறது.
இப்பகுதியில்
திசைமானிகள் ஒழுங்காண திசை காட்டுவதில்லை. சில இடங்களில் கர கரவென சுழழுவதாக
கூறுகிறார்கள். பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து பார்க்கப்ட்டதில், காந்த புல மாறுதல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பூமியில் இரண்டு இடங்களில் மட்டுமே காந்த புல மாற்றம் உள்ளது ஒன்று சரியான
பூமியின் வடக்கு பகுதி மற்றொன்று காந்தபுல வடக்கு நேர் கோட்டுப்பகுதி. இந்த
இடங்களில் மட்டுமே திசைகாட்டி [காம்பஸ்] தவறுகிறது. சக்திவாய்ந்த எலக்ட்ரானிக்
சுழற்மேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடலினுள்
மெக்சிகோவில் தொடங்கும் கல்ப்நீரோட்டம் புளோரிடா கணவாயினூடாக வட அட்லாண்டிக் வரை
செல்கிறது. இதன் அகலம் 40 முதல் 50 மைல் தொலைவு பரந்துபட்டது. மேலும் இதன் வேகம்
மிக அதிகம். தட்ப வெப்பநிலை மாற்றம் நிகழ்த்துவது இந்த வெப்ப நீரோட்டம்.பெர்முடா
முக்கோணப்பகுதியில் 28000 அடி ஆழம் கொண்ட பெரிய நீர் சுழல், 80 அடி உயரே எழும்பும் பிரம்மாண்ட அலைகள்
இப்பகுதியினுள் நடப்பவகைகளை மறைக்கின்றன. சாட்டிலைட் புகைப்படங்கள் இதை
உறுதிப்படுத்துகிறது.
இப்பகுதியில்
நிலையற்ற காலநிலைமாற்றம் நிலவுகிறது. கரீபியன் அட்லாண்டிக் கூம்பு புயல்எப்போது
வேண்டுமானலும் சுற்றி சுழன்று வரும்.
மனித தவறுகள் ஒரு
காரணமாக சொல்லப்படுகிறது.
எது எப்படியோ
உலகத்தின் விடை தெரியாத மர்ம பகுதி இது. காலம் தான் பதிலளிக்க வேண்டும்.அறிவியல்
உச்சாணியில் இருப்பதாக சொல்லிக் கொண்டாலும் இன்னும் விடுபடாத புதிர்களால்
சூழப்பட்ட அதிசய உலகம்தான் இது. ஆனால், இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்க முடிந்த பல விஷயங்கள் ஒரு காலத்தில்
மண்டையைப் பிய்த்துக் கொண்டு, கடைசியில்,
சாத்தியமே இல்லை என்று
பலரால் கைவிடப்பட்டவைதான். அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா
முக்கோணம்!
வடக்கு
அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா
கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளதுபெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான
பிரதேசத்துக்கு உலகம் சூட்டியுள்ளபெயர்தான் பெர்முடா முக்கோணம். பல நூறு ஆண்டுகளாக
மர்மமாகவே இருக்கும் பகுதி இது.
விமானம்
கண்டுபிடிப்பதற்கு முன் நீர்வழி போக்குவரத்துதான் தொலைதூர பயணத்திற்கு உதவியது!
அப்படி பயன்படுத்தப்பட்ட மரக்கலன்கள், கப்பல்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களின் ஆபத்துக்களால்
சூழப்பட்டிருந்தன. அதனால், அவற்றின்
முடிவுகளின் தகவல்களும் அக்காலத்தில்யாருக்குமே தெரியாமல் அந்த நீர்வழி
வாகனங்களுடனேயே புதையுண்டு போயின.
ஆனால்
பெர்முடாவின் மர்மங்கள் குறித்து தகவல்கள் வெளிப்பட்டபோது, உலகம் மீண்டும் குழப்பத்தில் மூழ்கியது. அதாவது
கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் காணாமல்
போவது ஆச்சர்யமாக இருந்தது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின்
கடலுக்கடியில்இருக்கும் எரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு
காரணம் எனகண்டறியப்பட்டது.
பூமி அதிர்வால்
கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சஸதனமாக இருக்கும். ஆனால், இவை கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை.
நடுகடலிலேயே அடங்கி அமைதியாகி விடலாம். அவை ‘ராக் வேவ்ஸ் (rock waves)’ என்று அழைக்கப்படுகின்றன.
ஒரு சிறிய
அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சஸ அலையாக உருவெடுத்து பெரும்
கப்பல்களைகூட கவிழ்ந்துவிடும்! ஆனால், இந்த அலைகள் கப்பல்களை கவிழ்க்கின்றன என்றால், அப்படி ஆபத்தில் சிக்கி மூழ்கும்
கப்பல்களிலிருந்து ‘கட்டுப்பாட்டு
அறைக்கு’ எந்த தவல்களும்
வருவதில்லையே ஏன்? இது தொக்கி
நிற்கும் ஆச்சரியமாக இருந்தது.
சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல்
போவதற்கு, எரிமலை,பூகம்பம், ராட்ஸச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் சொல்ல
முடியும். ஆனால், வான் மார்க்கமாக
செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன? என்ற அடுத்த கட்ட கேள்விக்கு விடை தேடும்
முயற்சியில் விஞ்ஞானிகள் களமிறங்கினர்.
1945 ஆம் வருடம்
அமெரிக்காவை சேர்ந்த ஐந்து F19 வகை
போர்விமானங்கள், பெர்முடா
முக்கோணத்தின் மீது பறந்து சென்றன. ரோந்து பணிக்காககிழக்கு நோக்கி 1700
கிலோமீட்டர் வரை செல்வது அவர்களது இலக்காக இருந்தது. கிளம்பிய 2 மணி நேரத்தில்,
அந்த ஐந்து விமானங்களும்
தரைக்கட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டன. கடைசியில், ஐந்து விமானங்களும் காணாமல்போயின!
கட்டுப்பாட்டு
அறையிலிருந்து விமானங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும்,விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது
தெரியவந்தது. அருகில் சென்றுகொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களின் சிக்னலை ரிசீவ்
செய்திருந்தார்கள். அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து தடம் மாறி ஐந்து
விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பதும் தெரியவந்தது! அதேநேரத்தில் விமானங்கள்
‘பெர்முடா முக்கோணத்தில்’
விழவில்லை. அருகில்
இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநில காட்டில், விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினாலும்
இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும்ஆச்சர்யமாகவே உள்ள
விஷயமாகும்!
இந்த சம்பவம்
நடந்து சில ஆண்டுகள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானிசொன்ன தகவல்கள் பெர்முடா
பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கவே செய்தன.புரூஸ்
மியாமியிலுருந்து பஹாமா வழியாக போர்டோரீகா சென்று கொண்டு இருந்தார். அப்போது
திடீரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தன. ஒரு பெரும் புயலுக்கான அறிகுறி போல்
அது தோன்றியது. திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது. அவரால் சரியான
திசையை கண்டறிய முடியவில்லை. இருப்பினும் அவரது 15 ஆண்டு விமானம் ஓட்டும் அனுபவம்
அவரை அந்த சிக்கலிலிருந்து தப்பிக்க உதவியது.
தொலைவில்
மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை புரூஸ் கண்டார். அதிலிருந்து
வெளிப்பட்ட ஒளி தப்ப முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு ஊட்டியது. வேகமாக அந்த
குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின்னால் கருமேகங்கள் சூழ்ந்து
கொண்டன.அவருக்கு
முன்பக்கமாக கருமை நிற கோடுகள் வளையங்களாக தோன்றின! கிட்டதட்ட 16கிலோமீட்டர் தூரம்
அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறுகிறார். ஆனால், அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20
நொடிகள்தான்! உண்மையில், அவரது விமானம்
அந்தத் தொலைவைக் கடக்க பொதுவாக மூன்று நிமிடங்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அது மட்டுமல்ல அதிலிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு பல ஆச்சர்யங்கள்
காத்திருந்தன.
மேகங்கள்
சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டன. பஹாமா அடைய
புரூஸ் கடக்க வேண்டிய தூரம் 160கிலோமீட்டர். ஆனால் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட
நேரம் வெறும் மூன்று நிமிடங்கள்தான்! ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில்
அவர் பறந்திருக்கிறார். சாத்தியமே இல்லாத பயணம் இது. ஏனெனில் அவரதுவிமானத்தின்
அதிகபட்ச வேகமே மணிக்கு 300 கி.மீட்டர்கள் தான்!
எவ்வாறு இது
சாத்தியமானது? திசைகாட்டி
குழம்பியதின் காரணமாக அது சூரியனின்மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும்
விமானம் காலத்தை கடந்து வென்றது எப்படி? அதில் தோன்றியது தான் ‘வார்ம்ஹோல்’
எனும் சூத்திரம். காலத்தை
வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும்
கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ்
சொல்கிறார்!
வார்ம்ஹோல்
என்றால் என்ன என்பதை எளிமையாக ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்!புவி ஈர்ப்பு
விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல்
வெகுநேரம் பறந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். இது காற்றின் விசையை
பயன்படுத்துவதால்தான் சாத்தியமாகிறது. அதேபாணியை பயன்படுத்தி தான்கிளைடர்கள்
பறக்கின்றன அதாவது இயற்கையில் கிடைக்கும் சக்தியைபயன்படுத்தி பெரியளவு ‘திறன்’ செலவழிக்காமல் பலனடைவது.
இதே போல்
வார்ம்ஹோலையும் பயன்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகளின்கருத்து!இந்த பிரபஞ்சம்
வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்தாகும். ஒருவட்டத்தின் விளிம்பில் சுற்றி
வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது
காலத்தையும், தூரத்தையும்
வெல்லும்தந்திரமாகும்!
டார்க் எனர்ஜியை
பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன்உந்தப்படுகிறது. ஐன்ஸ்டீன்
தத்துவத்தின்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது. ஆனால், டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது. காரணம்
பின்னாலிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும்வேலையையும் அது
செய்கிறது.
ஒரே நேரத்தில்
இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின்
வேகத்தை மிஞ்ச முடியும் என்கிறது விஞ்ஞானம்! ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்றுதானா? இல்லை தனிதனியா? என்று இன்னும் முடிவுக்கு வர முடியவில்லை,
ஒருவேளை ஒன்றாக
இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது. சிறுசிறு துகள்களாகி விடுவோம்!
விஞ்ஞானம் இறுதி
வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ
தெரிந்துகொள்வதும், அதை
கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்குவழிவகுக்கும்!
இப்பகுதியில்
மாயமானவைகளின் லிஸ்ட் பெரிய பட்டியலில் இருந்து சிலவற்றை மட்டுமே குறிப்பிடுகிறேன்
அடைப்புகுறிக்குள் காணாமற்போன ஆண்டு
282 டன் எடைகொண்ட
மேரிசெலஸ்டி எனும் கப்பல் [1872]
USS சைக்ளோப்ஸ் 309
பயணிகளுடன் மாயமானது [ 1918 மார்ச் 4]
ராய் ஃப்கு மரு
ஜப்பானியக்கப்பல் [1921]
டக்ளஸ் PC
3 மியாமி நோக்கி சென்றது
இதில் 32 பேர் இருந்தனர். [1948 டிசம்பர் 28 ]
அமெரிக்க
பிரிடிஸ் ஏற்வேஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம்[1948], மற்றும் ஜமைக்காவிலிருந்து கிங்ஸ்டன் நோக்கி
சென்ற விமானம் [1949]
SS மரைன் சல்பர்
குயின் எண்ணெய் கப்பல் புளோரிடா வழியாக சென்றது இதில் 39 பேர் இருந்தனர் [1963
பிப்ரவரி 4]
புளோரிடா
நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும்
மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ்
வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில்
மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.
“பிளைட்-19′ என்பது
குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். இது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. இந்த விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர்
5-ஆம் தேதி, ஒரு பயிற்சியில்
பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக்
கடலின்மீது பறந்துகொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா
பகுதியில் மறைந்துபோனது.இந்த நிகழ்வைப் பற்றி
கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம்
இதுதான்:
“விமானம் தன்
கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய
அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானி லெப்டினென்ட் சார்லஸ் கரோல்
டெய்லரின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத
புதிராக உள்ளது.”
இதைவிட மர்மமான
இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலை
மீட்பதற்காக கடற்படை விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த மீட்பு விமானத்தில் மொத்தம்
13 பேர் பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக் கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த
விமானம். சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த விமானத்திலிருந்து எந்தத் தகவலும்
இல்லை. அப்படியே தொலைந்துபோய்விட்டது! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில் நடந்தது.
1872-ஆம் ஆண்டு
282 டன் எடைகொண்ட “மேரி செலஸ்டி’
என்னும் கப்பலும்,
1864-ஆம் ஆண்டு
செப்டம்பர் 13-ஆம் தேதி “மேரி செலஸ்டி’
என்று அதே பெயர்கொண்ட
இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில் மறைந்துபோனதாக பழைய கால
செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் 1918-ஆம்
ஆண்டு மார்ச் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. பார்படோஸ் தீவிலிருந்து
கிளம்பியது “யுஎஸ்எஸ்
சைக்ளோப்ஸ்’ எனும் ஒரு
பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.
“ஆரான் பர்’
என்பவர் முன்னாள்
அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகள் “தியோடோசியா பர் அல்ஸ்பான்’, தெற்கு
கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு “பேட்ரியாட்’ எனும் கப்பலில் பயணம் செய்தார். பின்பு,
அவரைப் பற்றி எந்த
தகவலும் இல்லை. பெர்முடா முக்கோணத்தில் 1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடந்த
சம்பவம் இது.
முக்கோண
எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான்
பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் “டக்லஸ் பிசி-3.’ மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த
விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன
ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.
அசோர்ஸிலிருந்து
பெர்முடா செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல்
போனது. 1949 ஜனவரி 17-இல் ஜமைக்காவிலிருந்து, கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற இன்னொரு
விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த இரண்டு விமானங்களும் தென்
அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான
ஒரே ரக விமானங்கள். இதுவும் பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.
இன்னும் ஒரு
பெர்முடா தகவல். முன்பு கந்தகம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது “எஸ் எஸ் மரைன் சல்பர் குயின்’ எனும் கப்பல். இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம் தேதி எண்ணெய்
ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக சென்றுகொண்டிருந்தது. அதில் 39 பயணிகள்
இருந்தார்கள். அந்தக் கப்பலிலிருந்து பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல்
“காண முடியாத இடத்திற்குச்
சென்றுவிட்டது’ என்ற தகவலை
மட்டும் பத்திரிகைகளில் காணமுடிந்தது.
மேலும், ஒரு வியப்பான சம்பவம் பெர்முடா முக்கோணப்
பகுதியில் நடந்தது. இது நடந்தது 1921-இல். “ரய் ஃபுகு மரு’ எனும் ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல்
ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து,””கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது…! விரைந்து உதவிக்கு வாருங்கள்…”எனும் வார்த்தைகள் அபாய அறிவிப்பாக
அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக்
குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.
மேற்கண்ட அனைத்து
மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை
கிடைக்கவில்லை.
1962-இல் “பிளைட்-19′
தொலைந்துபோன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விமான
ஓட்டி,”நாங்கள் இப்போது எங்கே
இருக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை…” என்று தகவல் அனுப்பியதாக , அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.
மேலும், வின்சென்ட் காடிஸ் என்பவர் “அர்கோசி’ எனும் இதழில் எழுதும்போது, இந்த விமானம் தொலைந்ததற்கு மாயச் சக்திகளே
காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடற்படை விசாரணைக் குழு அதிகாரிகள்,””விமானம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டுவிட்டது” எனும்
அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தச் சமயத்தில் பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட
வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் உலக நாடுகளெங்கும் பத்திரிகைகளில் பிரசுரமாயின.
இந்த மர்ம
நிகழ்ச்சிகளுக்கு மேலும் திகிலூட்டும் விதமாக,”நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்’ எனும் கட்டுரையும், “கண்ணுக்குத் தெரியாத வெளிகள்’ மற்றும் “சாத்தானின் முக்கோணத்தில்’ எனும் புத்தகங்களும் வெளிவந்தன. இந்த
வெளியீடுகளில், “வேற்றுக்
கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருக்கலாம்.
அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக்குத்தான்
தெரியும்’ என்று எழுதப்பட்டிருந்தன.
கரீபியன் தீவு
மக்களும்,முக்கோணப்
பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச்
சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.
இந்த
மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ
என்பவர், “தி பெர்முடா
டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு’ என்ற நூலை
வெளியிட்டார்.
அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும்
தொலைதல்களுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள்,
மிகப் பெரிய முரட்டு
அலைகள், கடற்கொள்ளையர்களின்
செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார்.
அதற்கான
தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சில எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும்,
இது மனிதனுக்கு
அப்பாற்பட்ட சக்திகளின் வேலை என்று கதைவிடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் என்று
அவர் குற்றம் சாட்டினார்.
சில ஆய்வாளர்கள்,
“”பெர்முடா முக்கோணப்
பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமங்களாகச்
சேகரமாகியிருக்கின்றன. இந்த மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியைக் குறைத்து பெரிய
நீர்க் குமிழ்களை உருவாக்கி கப்பல்களை மூழ்கடித்துவிடுகின்றன” என்று தெரிவிக்கின்றனர். மேலும் சில
ஆய்வாளர்கள்,””திடீர் மீத்தேன்
வெடிப்புகள் சேற்று எரிமலைகளை உருவாக்கி கப்பல்களை மிதக்க முடியாமல்
மூழ்கடித்துவிடுகின்றன” என்ற தகவல்களை
வெளியிட்டனர்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க
நிலவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,””உலகம் முழுதும் கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள்
பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக, தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய “ப்ளேக்ரிட்ஜ்’ பகுதியில் இச்சேகரங்கள் மிக அதிகமாக
இருக்கின்றன. இருப்பினும், அக்
கடற்பகுதியில் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடப்பதைப்போன்ற எந்த நிகழ்வுகளும்
நடப்பதில்லை.
பெர்முடா முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக் குறைவு. எனவே,
மர்மச் சம்பவங்களுக்கு
ஹைட்ரேட்டுகள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தது.
இதுவரை ஏராளமான
விமானங்களும், கப்பல்களும்
பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும்,
இதற்கெல்லாம் அடிப்படையான
காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.