ஜிகர்தண்டாவுக்கும் எதிர்ப்பு கொடி காட்டப்படுகின்றது!..

முன்னணி ஹீரோக்கள் படங்களில் செய்கிற தவறை இளவட்ட ரசிகர்கள் அப்படியே பின்பற்றுவதால், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதற்கு சமூக அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக கண்டும் காணாததும் போல் இருந்து வந்த அரசியல் கட்சிகள், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகை பிடித்தபடி நிற்கும் போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு சுகாதார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மீண்டும் சில அரசியல் கட்சிகள் கொம்பு சீவிக்கொண்டு நிற்கின்றன.


அதனால், இப்போது சித்தார்த்தின் ஜிகர்தண்டா படத்திலும் புகை பிடிக்கும் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருப்பதால் அவற்றையும் நீக்க வேண்டும் என்று கொடி பிடித்துள்ளன. அதோடு, இது இனிமேல் தமிழ் சினிமாவில் தொடர்ந்தால் அதற்கு எதிர்ப்பாக போராட்டங்கள் வெடிக்கும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து, ஜிகர்தண்டா படத்தில் இடம்பெற்றுள்ள புகை பிடிக்கும் காட்சிகள் நீக்கப்பட உள்ளதாம். ஏற்கனவே படம் இரண்டே முக்கால் மணி நேரம் வரை செல்வதால், இந்த கட்டிங்கூட அந்த படத்துக்கு தேவையான விசயம்தான் என்று கத்திரியை சுழற்ற ஆரம்பித்து விட்டார்கள்.