மீண்டும் சமூக வலைதளத்திற்குள் வந்தார் த்ரிஷா...!

சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு, தங்களைப்பற்றிய தகவல்களை வெளியிடுவதை ரஜினி, விஜய்,விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்-நடிகைகளே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி அக்கவுண்ட் வைத்திருக்கும் அனுஷ்கா, தமன்னா, நஸ்ரியா போன்ற நடிகைகளை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், இதை சில நடிகர்-நடிகைகள் தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை தங்களுக்கு கிடைக்கிற லைக்குகளை பொறுத்தே கணித்துக் கொள்கிறார்கள். இந்த வரிசையில் இப்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார்.


ஏற்கனவே டுவிட்டர், பேஸ்புக்கில் த்ரிஷா இருந்தபோதும், அதில் தன்னைப்பற்றிய தகவல்களை அவர் அப்டேட் பண்ணாமல் இருந்தார். ஆனால் தற்போது அஜீத், ஜெயம்ரவி போன்ற நடிகர்களுடன் நடிப்பதையடுத்து, தன்னைப்பற்றிய சுவராஸ்ய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் மீண்டும் சமூக வலைதளத்திற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் த்ரிஷா.