வெள்ளை பூடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளை பூடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆரோக்கியமான பூ‌ண்டு இட்லி.

ரவா இட்லி,இட்லி, கா‌‌ஞ்‌சிபுர‌ம் இட்லி, குஷ்பு இட்லி கூட தெ‌ரியு‌ம். இது என்ன பூ‌ண்டு இட்லி என்கி‌றீ‌ர்களா, இதோ அதற்கான செய்முறை உங்களு‌க்காக........

உளுந்து - 100 கிராம்
அரிசி - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1 பிடி
பூண்டு - 100 கிராம்
கடுகு, எண்ணெய் - தாளிக்க

செய்முறை.

உளுந்து, ஊறவைத்த அரிசி, வெந்தயத்தை இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளைப் பூடின் முக்கியத்துவம்.


'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது.

 ''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.