வெண்டைக்காயின் மருத்துவ குணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெண்டைக்காயின் மருத்துவ குணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெண்டைக்காய் மூட்டு தேய்மான நோயை கட்டுப்படுத்தும்.

வெண்டைக்காயில் பொதிந்திருக்கும் முதல் தரமான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உணவுப் பாதையை ஒழுங்காக இயங்கச் செய்து குடல் அதிக அளவில் சர்க்கரைச் சத்தை கிரகித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறது. கரையும் தன்மையுள்ள கரையாத்தன்மையுள்ள இருவித நார்ச்சத்தை வெண்டைக்காய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெண்டைக்காயில் மண்டிக்கிடக்கும் கொழகொழப்புமிக்க சவ்வுத் தன்மை இரத்தத்தில் கொழுப்புத்தன்மை மற்றும் பித்த நீர் அதிகரிக்கா வண்ணம் அவற்றை ஈரலின் துணை கொண்டு கட்டுப்படுத்துகிறது.