வாழை இலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழை இலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வாழை இலை உபயோகத்தின் நன்மைகள்.

தமி­ழர்­க­ளு­டைய கலா­சா­ரத்தில் முக்­கிய பங்கு வாழை இலைக்கு உண்டு.சுப காரி­யங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலை­வாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்­பத்தின் மேலே தேங்காய் வைப்­பது வழக்கம். இதை தமி­ழர்கள் தமது பாரம்­ப­ரி­ய­மா­கவே செய்து வரு­கி­றார்கள். தலை­வாழை என்­றதும் நம்­அ­னை­வ­ருக்கும் ஞாபகம் வரு­வது விருந்­துதான். அது சைவ உண­வாக இருந்­தாலும்அசைவ உண­வாக இருந்­தாலும் இலையில்தான் நிச்­சயம் இருக்கும்.

வாழை இலையின் அருமைகள்.


நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போதும்  தட்டிலேயே உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது நமக்கு தெரியவரும்.

வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.சாப்பாட்டை வாழை இலையில் சுற்றினால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.