லட்சுமி ராமகிருஷணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லட்சுமி ராமகிருஷணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ஆசாமி கொலை மிரட்டல்!

யுத்தம் செய், சென்னையில் ஒருநாள், சுட்டகதை, விடியும்முன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் லட்சுமிராமகிருஷ்ணன். அதோடு, ஆரோகணம் என்ற படத்தை அடுத்து இப்போது நெருங்கி வா முத்தமிடாதே என்றொரு படத்தை இயக்கி வருகிறார். அது மட்டுமின்றி, தொலைக்காட்சியிலும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இதில், பெரும்பாலும் கணவன்-மனைவிக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லி வருகிறார். அப்போது, யார் தவறானவர்களோ அவர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதன்காரணமாக அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறையபேர் உருவாகிக்கொண்டிருக்கிறார்.