மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் அடிக்கடி கழுத்து வலி மற்றும் கால்வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். சில வருடங்களுக்கு முன்பு அவர் ஸ்படிகம் என்ற படத்தின் படப்பிடிப்பில் யானை மேலிருந்து இருந்து கீழே குதிப்பது போன்று டூப் போடாமல் நடித்தார். அப்போது அவரது காலில் பலத்த அடிபட்டு அதற்கான சிகிக்சை எடுத்துக் கொண்டார். அன்று முதல் அவருக்கு கால் மற்றும் கழுத்துவலி அடிக்கடி ஏற்பட்டது. மாத்திரை எடுத்துக் கொண்டு சமாளித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வலி ஏற்பட்டதால் எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வலியை நிரந்தரமாக குணமாக்க காலில் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.