பொள்ளாச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொள்ளாச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருட்டி வி.சி.டி. ஒழிய முடிந்த அளவுக்கு முயற்சி எடுப்பேன்: விஷால் பேட்டி

திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் திருட்டு வி.சி.டி.க்களை பிடித்து நடிகர் விஷால் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது பொள்ளாச்சி பகுதியில் ‘ஆம்பள’ படப்பிடிப்பில் அவர் பிசியாக உள்ளார். படப்பிடிப்புக்கு நடுவே நடிகர் விஷால் அளித்த பேட்டி வருமாறு:–

திருட்டு வி.சி.டி.க்கு எதிராக நான் தனிப்பட்ட முறையில் போராடுகிறேன் என்பது தவறு. இதர நடிகர்கள், மற்ற சங்கங்களிடம் இதற்கு ஒத்துழைப்பு கேட்டு இருக்கிறேன். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. என்னுடைய ஈ.மெயில் ஐ.டி.க்கு நிறைய பேர் புகார் அனுப்புகிறார்கள். ஆவடியில் ஒருவர் திருட்டு வி.சி.டி. விற்பதை ஆவடி போலீசில் புகார் செய்து சி.டி. விற்றவர்களை கைது செய்ய வைத்துள்ளார்.