இன்றைய காலத்தில் அதிகமாக பாவிக்கப்படும் தொழில்நுட்பங்களில் புளூடூத்தும் ஒன்றாகும்.அனால் புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” என்ற அளவுக்கு தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும்.
