பிரசாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரசாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இளைஞர் பட்டாளத்துடன் கூட்டணி அமைத்த சிங்கம்புலி!

1990ல் வைகாசி பொறந்தாச்சி என்ற படத்தை இயக்கியவர் ராதாபாரதி. இந்த படத்தில்தான் பிரசாந்த் நாயகனாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக காவேரி நடித்திருந்தார். அப்படம் சூப்பர் ஹிட்டானபோதும் அதையடுத்து அவர் உடனடியாக படம் இயக்கவில்லை.

15 ஆண்டுகளுக்கு பிறகு 2005 ல் காற்று உள்ளவரை என்ற படத்தை இயக்கினார்.அதைத் தொடர்ந்து இப்போது நண்பர்கள் நற்பணி மன்றம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தை சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைப்போன்று காதல், காமெடி கலந்த கலகலப்பான கதையில் இயக்கிக் கொண்டிருககிறாராம் ராதாபாரதி.

நர்கீஸ் பக்ரியின் சிறப்பு அறிவிப்பு!!

பிரசாந்த் நடித்து வரும் சாகசம் படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாட்டுக்கு நடனமாடியவர் நர்கீஸ் பக்ரி. இந்தி சினிமாவில், சல்மான்கான், ஜான் ஆபிரகாம், ரண்பீர் கபூர், ஷாகீத் கபூர் என பல முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக, குத்தாட்ட நடிகையாக நடித்துள்ள இவர், தற்போது பாலிவுட்டின் டாப் 10 கவர்ச்சி நடிகைகளில் முன்னணி வகித்து வருகிறார்.


மேலும், சாகசம் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள நர்கீஸ் பக்ரியை, மேலும் சில நிறுவனங்களும் குத்துப்பாட்டு நடனமாட அழைத்தனர். ஆனால் அவரோ, சினிமாவில் நான் ஆடிய கடைசி நடனம் பிரசாந்துடன் ஆடியதாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன் எனறு சொல்லி தொடர்ந்து குத்தாட்டமாட மறுக்கிறாராம். காரணம், பாலிவுட்டில் கதாநாயகியாக சில படங்களில் நடித்த நான் பின்னர் அயிட்டம் பாடலுக்கு நடனமாடியதால், அதையடுத்து எனக்கான கதாநாயகி வாய்ப்புகள் குறைந்துவிட்டன.