பாப்கார்ன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாப்கார்ன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நுரையீரலை பாதிக்கும் பாப்கார்ன் வாசனை.

மெகா ஷாப்பிங் மால்கள் என்றாலும் மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்  என்றாலும் நிரம்பி வழிகிற பாப்கார்ன் பாக்கெட்டுடன் வலம் வருவது குட்டீஸ், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் இன்று ஒரு ஃபேஷன். பாக்கெட் 100 ரூபாய் என்றாலும் வாங்கத் தயங்குவதில்லை. அதன் மணமும் சுவையும் ஒரு காரணம் என்றால், ‘சோளப்பொரிதானே… உடம்புக்கு ரொம்ப நல்லது’ என்கிற நினைப்பு இன்னொரு காரணம். ‘நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்பது போல இதன் பின்னே நிறைய பிரச்னைகள்!

சோளம் உடலுக்கு நல்லதுதான். நார்ச்சத்து நிறைந்ததுதான். கலோரி குறைவான, ஆரோக்கியமான தீனிதான்… சந்தேகமே இல்லை. ஒரு கப் பாப்கார்னில் இருப்பது வெறும் முப்பதே கலோரிகள்… வைட்டமின் பி1, பி5, சி, பாஸ்பரஸ், மாங்கனீசு என போனஸாக ஏகப்பட்ட சத்துகள்! இதெல்லாம் இயற்கையான முறையில் சோளத்தைப் பொரித்து சாப்பிடுகிற வரையில் மட்டுமே!