பாகுபலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாகுபலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாகுபலி என் அப்பா எழுதிய கதை: ராஜமவுலி சொல்கிறார்

தெலுங்கின் பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி, நான் ஈ, மாவீரன் படங்கள் மூலமாக தமிழுக்கும் அறிமுகமானவர் அவர் தற்போது 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் பாகுபலி. தமிழில் மகாபலி. இது சரித்திரக் கதை கொண்ட படம். படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் உலவிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இது என் அப்பா எழுதிய கதை என்கிறார் ராஜமவுலி. அவர் கூறியிருப்பதாவது: என் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் ஒரு இயக்குனர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு கதை எழுதி வைத்திருந்தார். அதை படமாக எடுக்கவும் ஆவல் கொண்டிருந்தார். அவரால் முடியவில்லை. அது ஒரு நாட்டுக்காக இரண்டு உறவினர்கள் மோதிக் கொள்கிற கதை.

100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்திய அளவில் பல மொழிகளிலும் தற்போது நூற்றுக்கணக்கான படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை பெற்றிருப்பது இரண்டே இரண்டு படங்கள்தான். அந்த இரண்டில் ஒன்று.... விக்ரம் நடிக்க, ஷங்கர் இயக்கி வரும் 'ஐ' படம் என்பது நமக்கெல்லாம் பெருமை.

மற்றொரு படம்... 'நான் ஈ' படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாஹுபலி தெலுங்குப்படம். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க பல கோடி செலவில் உருவாகும் படம் இது. 'ஐ' படத்தின் பிரம்மாண்டத்தையும், அப்படத்தில் விக்ரமின் மாறுபட்ட தோற்றம் மற்றும் நடிப்பையும் சமீபத்தில் நடத்திய ஆடியோ விழாவில் திரையிட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மூலம் கோடிட்டுக் காட்டிவிட்டார் இயக்குநர் ஷங்கர். ஐ படத்தைப் போலவே, தற்போது பாஹுபலி படத்தைப் பற்றி வெளிவரும் செய்திகள் ஒவ்வொன்றும் வாய் பிளக்க வைக்கின்றன.