பத்மபிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்மபிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பத்மபிரியா திடீர் திருமணம்: குஜராத் என்ஜினீயரை மணந்தார்

பத்மபிரியா தமிழில் சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படங்களிலும் நடித்தார். கடைசியாக தங்கமீன்கள் படத்தில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பத்மபிரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் மும்பையில் நேற்று காலை திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை.