நேர விரயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர விரயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

168 மணி நேரத்தில் என்ன செய்கிறீர்கள்.

ஒரு நாளில் நமது அன்றாட தேவைகளுக்கு எவ்வளவு தொகை செலவு செய்கிறோம் என்று கணக்கு வைத்துள்ளோம். ஆனால் நாம் கணக்கு இல்லாமல் செலவழிக்கும் ஒரு விஷயம் பொன்னான நேரம் மட்டும்தான். "ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை..!" என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். அதனால் சற்று விலக்கு அளித்து 24 மணி நேரங்களை கொண்ட ஏழு நாட்கள் என்று வைத்து கொள்வோம். இப்போது நமக்கு 168 மணி நேரம் கையில் உள்ளது. இதில் நாம் என்ன செய்யப் போகிறோம்.. நமக்கு கிடைக்கும் நேரம் என்ன? அதனை எப்படி செலவழிப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இதோ… இந்த 168 மணி நேரத்தில் 49 மணிநேரத்தை கழித்து விடுங்கள்.