நக பாதுகாப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நக பாதுகாப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நகத்தை வைத்து நோயை கண்டு பிடிக்க முடியும்.

அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள்.

ஏன்‌ எனில் உட‌லி‌ல் ஏற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நாம் நமது நக‌ம் மூலம் தெரிந்து கொள்ளலாம். உட‌லி‌ல் ஏற்‌படு‌ம் ஒவ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒவ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது.

நகங்களை பாதுகாப்போம்.

நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது அவ்வளவு நல்லதல்ல. சாதாரணமான எந்தவித வேலைக்கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே இருக்கும். மேலும் அது பிய்ந்தும் உடைந்தும் தொல்லை தரும். நடுவில் அரைகுரையாக உடைந்து அல்லது பிரிந்து மூளியாகக் காட்சியளிக்கும் நகம் விரலின் அழகையே கெடுத்துவிடும்.