தொலைப்பேசி வந்த
உடனே படிப்படியாக தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட்டது. தொலைபேசியை (Telephone) தொடந்து Telefax உதயமானது.
நகல்களை அனுப்ப இந்த Telefax மிகவும்
பயனுள்ளதாய் இருந்தது. ஒளிநகல்களை
அனுப்பும் சேவை கிடைக்கபெற நகரங்களை நாட வேண்டியிருந்தது இன்றும் அதே நிலை தான்
இருக்கிறது. எவ்வளவோ புதுமைகள் வந்தாலும் அதாவது மின்னஞ்சல் போன்ற சேவைகள்
இருந்தாலும் இன்றும் பல நாடுகளில் அரசு அலுவலகங்களில் இந்த ஒளிநகல் சேவை
பயன்பாட்டில் இருந்து வருவதற்கு காரணம் இதை பயன்படுத்துவது எளிமை என்ற
காரணத்தினால் மட்டுமே.