'அஞ்சான்' படத்தையடுத்து லிங்குசாமி, கார்த்தி நடிக்க உள்ள 'எண்ணி ஏழே நாள்' என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே லிங்குசாமி தான் இயக்குனரான அறிமுகமான 'ஆனந்தம்' படத்தின் நாயகன் மம்முட்டியையும், அவருடைய மகன் துல்கர் சல்மானையும் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். மம்முட்டி அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும் நடிப்பார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. அவருடைய மகன் துல்கர் சல்மான் 'வாயை மூடிப் பேசவும்' என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்துவிட்டது.