தண்டபாணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தண்டபாணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடிகர் தண்டபாணி மரணம்!

‛காதல்' படத்தில் அறிமுகமான நடிகர் தண்டபாணி, சென்னையில் மாரடைப்பால் இன்று(ஜூலை 20ம் தேதி) காலமானார். அவருக்கு வயது 71. இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் அறிமுகமானவர் நடிகர் தண்டபாணி. முதல்படத்திலேயே கொடூர வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர், முதல்படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைய தண்டபாணி என்ற அவரது பெயரோடு ‛காதல்' பட தலைப்பு ஒட்டிக்கொண்டது.

இதனால் பின்னர் ‛காதல்' தண்டபாணியாக சினிமாவில் வலம் வந்தவர், தொடர்ந்து இங்கிலீஸ்காரன், முனி, சித்திரம் பேசுதடி, மலைக்கோட்டை, கச்சேரி ஆரம்பம், குட்டி பிசாசு, மாப்பிள்ளை, தில்லாலங்கடி, வேலாயுதம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.