சீரகத்தின் மருத்துவ குணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீரகத்தின் மருத்துவ குணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சீரகத்தின் இயற்கை மருத்துவம்.

இதன் பெயரை பிரித்தால் – சீர் + அகம் – உடலின் உட்புறத்தை சீராக வைக்கும் என்று பொருள் படும். சீரகம் மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் தோன்றியிருக்கலாம்.
சீரகச் செடி ஒரு சிறிய, 1/2 அடி வளரும் செடி. சீரகத்தில் 5 வகைகள் உண்டு. அவை – நற்சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு), கருஞ்சீரகம், காட்டு சீரகம் மற்றும் பளப்பு சீரகம். முதல் இரண்டு வகைகளும் சமையலில் பயன்படுத்தப்படுபவை. அடுத்த இரண்டும் மருந்துகளாக பயனளிப்பவை. கடைசி ரகம் காரம் நிறைந்த வெளிநாட்டு சரக்காகும்.