சினிம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வரி ஏய்ப்பு செய்தாரா ஏ.ஆர்.ரகுமான்?

வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட பெருந்தொகைக்கு உரிய வரி செலுத்தாமல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக , வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில், முன்னணியில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

இவர் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதேபோல், 2010-11ம் ஆண்டில்,  பிரிட்டனை சேர்ந்த மொபைல்போன் நிறுவன்ததிற்கு, ரிங்டோன் தயாரித்து கொடுத்திருந்தார். இதற்காக, அந்நிறுவனம், ரகுமானுக்கு ரூ. 3.47 கோடி சம்பளமாக வழங்கியது. இந்த தொகையை, ரகுமான் நேரடியாக பெறாமல், தனது டிரஸ்ட் அக்கவுண்டில் செலுத்தி விடுமாறு கூறியுள்ளார்.