சங்கீதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கீதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மீண்டும் நடிக்க வருகிறார் சங்கீதா

மலையாள நடிகையான சங்கீதா வாழ்ந்து காட்டுவோம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எல்லாமே என் ராசாதான், பூவே உனக்காக உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு இயக்குனர் சரவணனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

இப்போது மாஜி ஹீரோயின்கள் ரீ-என்ட்ரி கொடுக்கும் சீசன். குறிப்பாக மலையாளத்தில் மஞ்சு வாரியாரின் ரீ-என்ட்ரிக்கு பிறகு வீட்டில் சும்மா இருக்கும் மாஜி ஹீரோயின்கள் கண்ணாடி முன்னால் நின்ற அழகு பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் சங்கீதா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார்.