கோவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அதிக கோபத்தின் பாதக விளைவுகள்.

மனித உடலின் கல்லீரல் தன் வேலையை செய்தால்தான் மற்ற உறுப்புகள் சீராக இயங்கும்.இது ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான சக்தியை பெற உதவும். ரத்தத்தை சேமித்து வைத்து உடல் உழைப்பின் போது தேவையான பகுதிகளுக்கு அனுப்பி தசை நார்களுக்கும் தசைகளுக்கும் ஊட்டமளிக்கிறது.

கல்லீரலின் சக்தி பாதிக்கப்பட்டால் தசை நாண்கள் நீட்டி மடக்குதல்,சுருங்கி விரிதலில் தொய்வு ஏற்பட்டு உடலின் எலும்பு கூட்டமைப்பில் வலி மற்றும் நோய்கள் ஏற்படுகிறது.

சரும பாதிப்புகள், கண்பார்வை கோளாறுகள், விரல் நகங்களில் கோளாறுகளுக்கு கல்லீரலின் குறைபாடுகளே காரணமமாகும்.