கொசுத்தொல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொசுத்தொல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கண் பேசும் வார்த்தைகள் பாடல் ரீமிக்ஸ்....

கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் கரெண்ட் வருவதில்லை
ஒரு கடி மறைய மறுகடி தெரிய
பிளாஸ்டிக் உடம்பு  இல்லை
உடல் பெட் ஷிட் மூடி முடிவதில்லை
பிளாஸ்டிக் உடம்பு இல்லை
உடல் பெட்ஷீட் மூடி முடிவதில்லை

கொசு  பறந்த பிறகும்
கடியின் தழும்புகள் அழிவதில்லை
கடித்த காயம் நூறு கண்ட பிறகும்
உடல் அரிப்பு  நிற்ப்பதில்லை
ஒரு முறைதான் கொசு  கடிப்பதினால்
வருகிற வலி யாரும் அறிவதில்லை

ஆபத்தை விளைவிக்கும் கொசுவர்த்திச் சுருள்.

வெயில் காலம் முடிந்து மழைக் காலம் வந்தால் கூடவே கொசுக்களின் தொல்லையும் வந்து விடும். பகல், இரவென்று பாராமல் எப்போதும், எங்கேயும் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுக்கடி, பல அபாயங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதால் லிக்விட், கொசுவர்த்திச் சுருள், மேட், கிரீம் என்று பலதையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் கொசுக்களுக்கு எதிரான அரணாக விளங்கும் இவற்றில் பல, ஆபத்துகளையும் அள்ளி வந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்களும் மருத்துவர்களும்;