கேத்ரின் தெரசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேத்ரின் தெரசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோலிவுட் ஹீரோயின்களுக்கு ஷாக் கொடுத்த கேத்ரின் தெரசா!

அசின், நயன்தாரா, மீராஜாஸ்மின், அமலாபாலைத் தொடர்ந்து தற்போது கேரளத்தில் இருந்து வந்த நடிகைகள் லட்சுமிமேனன் முன்னணி வகித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து, இப்போது இன்னொரு கேரள நடிகை கேத்ரின் தெரசா என்பவரும் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படம் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது நடிப்பாற்றல் பற்றி பலரும் உயர்வாக பேசியதைத் தொடர்ந்து அதர்வா நடிக்கும் கணிதன் என்ற படத்தில் கமிட்டான கேத்ரின் தெரசா, இப்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி-அஞ்சலி நடிக்கும் படத்திலும் இன்னொரு நாயகியாக கமிட்டாகியுள்ளார். ஆக, தமிழில் நடித்த முதல் படம் இன்னும் திரைக்கு வரும் முன்பே அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி விட்டார் கேத்ரின் தெரசா.