காது இரைச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காது இரைச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காது குடையும் பழக்கம் நல்லதா ஆபத்தானதா?

காது குடைவது நம்மில் பலரிடம் பொதுவாகக் காணப்படும் பழக்கம் ஆகும். சிலர் காது குடைவதில் அலாதி சுகம் காண்கின்றனர். இந்த பழக்கம் நல்லதா? அல்லது இதனால் ஏதேனும் கேடு ஏற்படுமா?

மனிதக்காது வெளிக்காது, நடுக்காது, உட்காது என மூன்று பிரிவுகளாக உள்ளது இந்த மூன்று பாகங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிந்தால்தான் காது கேட்கும்; இல்லையென்றால் காது கேட்காது போய்விடும்.

வெளிக்காது சத்தத்தை திரட்டி நடுக்காதுக்கு அனுப்பும். நடுக்காது உள் காதுக்கு அனுப்பும் வேலையை செய்யும்.அதாவது நடுக்காதைத் தாண்டி இருக்கும் எலும்புகள் சத்தத்தை பெருக்கி உள் காதுக்கு அனுப்பி வைக்கும்.

சாதுவையும் கடுப்பாக்கும் காது இரைச்சல்.

ஏதோவொரு இரைச்சல் காதில் எழுகிறது. அக்கம் பக்கத்தில் யாரும் பேசாதபோதும், ரேடியோ கரகரக்காத போதும், வேறு எந்த வித ஓசையுமின்றி நிசப்பதமாக இருந்தபோதும் காதில் சத்தம் விழுகிறது,என பலர் கூறுவதை கேட்டிருப்பீர்கள்.அதற்கான காரணங்களும் சிகிச்சை முறை பற்றியும் ஆராய்வோமானால்,

மருத்துவத்தில் டினிட்டஸ் (Tinnitus) என்பார்கள். போலி ஒலி எனச் சொல்வதுமுண்டு. கரகரப்பது போலவோ, இரைவது போலவோ, ரீங்காரமிடுவது போல அல்லது வேறு ஏதோ ஓசை போலவோ கேட்கும். ஆனால் வெளியிலிருந்து வரும் ஓசையாக அல்லாமல், உள்ளிருந்து எழுவதுதான் இது. பெரும்பாலும் ஆபத்தான நோயல்ல. இருந்தபோதும் பொறுக்க முடியாத அரியண்டம் எனலாம்.