கமல்ஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமல்ஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தனது பிறந்தநாளான இன்று தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார் கமல்ஹாசன்

நடிகர் கமலஹாசன் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளையொட்டி பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தையும் சென்னையில் தொடங்கி வைத்தார் கமல். சென்னை, ராஜகீழ்ப்பாக்கம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை அவர் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கினார். அவரும், அவரது நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் மேலும் 25 ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக இப்பணியை தொடங்கி வைக்கும்போது கமல் கூறினார்.

இக்கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று மாலை 3 மணியளவில் கடற்கரை சாலையில், தூர்தர்ஷன் எதிரே உள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் பத்திரிகையாளர்களை கமல் சந்திக்க உள்ளார்.

ஆர்கேவின் பேச்சை கமலே வியந்து பாராட்டினாராம்!

சினிமாவில் ஹீரோ, வில்லன் என நடித்து வரும் நடிகர் ஆர்.கே, தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், ''என் வழி தனி வழி'' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், சுயமுன்னேற்றம் குறித்த தன்னம்பிககை பொதுக்கூட்டங்களிலும் சிறப்புரையாற்றி வருகிறார். அவரது தன்னம்பிக்கை தரும் பேச்சு பலருக்கு நன்மை விளைவித்தும் வருகிறதாம்.

இதுபற்றி ஆர்கே கூறும்போது, நான் இதுவரை தன்னம்பிக்கை குறித்து ஏராளமான மேடைகளில் பேசியிருக்கிறேன். அந்த வகையில் எனது பேச்சை 2 கோடிக்கும் மேலான தமிழக மக்கள் கேட்டிருக்கிறார்கள. அவர்களில் சுமார் 3 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள்.இது எனக்கு சந்தோசமாக உள்ளது. அதனால் சுயமுன்னேற்றம் தரக்கூடிய தன்னம்பிக்கை பேச்சினை தொடர்ந்து வருகிறேன் என்று கூறிய ஆர்கே, ஒரு இலக்கை குறி வைத்து யார் பயனித்தாலும் இறுதியில் அது வெற்றியிலேயே முடியும் என்பதை ஆணித்தரமாக சில உதாரணங்களை அவர்கள் முன் எடுத்து வைத்து நம்பிக்கையூட்டு வதாகவும் கூறுகிறார்.