ராஜ்-சுரேஷ்குமார் இருவரின் இயக்கத்தில் செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் நிறுவனம் தயாரித்துள்ள படம், ''கடவுள் பாதி மிருகம் பாதி''. இப்படத்தில் அபிஷேக், ஸ்வேதா விஜய் மற்றும் நான் கடவுள் பூஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் கிஷோர் மணி, பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ் உள்பட சிலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் நடிகை பூஜா பேசும்போது, இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜூம், நானும் பெங்களூரில் படித்தோம். அப்போது எனக்கு 16 வயது. ஒரு கல்சுரல் நிகழ்ச்சியில்தான் நாங்கள் முதன்முதலாக சந்தித்துக்கொண்டோம். அப்போது எங்களுக்கிடையே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் அது காதல் இல்லை. நட்புதான். அதையடுத்து ஒரு முறை என்னை சந்தித்தபோது நீ அழகா இருக்கே என்றான். நான் போடா என்று திட்டி விட்டேன்.