கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தங்கை துளசியை புகழ்ந்து தள்ளிய கார்த்திகா!

மாஜி நடிகை ராதாவின் கலைவாரிசுகள் கார்த்திகா- துளசி நாயர். இதில் கார்த்திகா கோ படத்திலும், துளசி கடல் படத்திலும் என்ட்ரி ஆனபோது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டவர்கள். அதோடு 1980 களில் அம்பிகா-ராதா சகோதரிகள் தென்னிந்திய சினிமாவை கலக்கியதைப் போன்று இந்த சகோதரிகளும் கலக்காமல் ஓயமாட்டார்கள் என்றெல்லாம் கோடம்பாக்கமே எதிர்பார்த்தது.

ஆனால், கோ படத்திற்கு பிறகு கார்த்திகா போட்ட சில அதிரடி கண்டிசன்களால் அவரிடம் கதை சொல்லியிருந்த டைரக்டர்கள் தெறித்து ஓட்டம் பிடித்தனர். அதற்கடுத்து தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவர் நடித்த அன்னக்கொடி படம் தோல்வியடைந்து கார்த்திகாவின் மார்க்கெட்டை காலி பண்ணியது. அதேபோல் கடல் படம் தோல்வியடைந்து துளசிக்கும் படமே இல்லாத நிலையை ஏற்படுத்தியது.

லட்சுமிமேனனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீதிவ்யா!

ராசியான நடிகை என்ற அடையாளத்துடன் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் லட்சுமிமேனன் குறிப்பிடத்தக்கவர். ஆரம்பத்தில் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்தவர், பின்னர் சித்தார்த், விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்னும் தன்னை வளர்த்துக்கொண்டார். இருப்பினும், தற்போது லட்சுமிமேனனுக்கான பட எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருக்கிறது. கடல் கெளதமுடன் அவர் ஏற்கனவே நடித்து வந்த சிப்பாய் படம் பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், தற்போது கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து விஷால் நடிக்கும் படம் ஒன்றிலும் கமிட்டாகியிருக்கிறார்.
ஆனால், இந்த நேரத்தில் லட்சுமிமேனனின் கைவசம் மேலும் இரண்டு படங்கள் இருந்திருக்க வேண்டுமாம். ஆனால், அந்த படங்களை வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகியான ஸ்ரீதிவ்யாதான் தட்டிப்பறித்து விட்டாராம். ஸ்ரீதிவ்யாவின் நடிப்பில் தற்போது ஜீவா வெளியாகியிருக்கும் நிலையில, டாணா, ஈட்டி, பென்சில், வெள்ளைக்காரதுரை என பல படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.