உயிர்கொல்லி நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயிர்கொல்லி நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உயிர்கொல்லியான எபோலா பற்றிய முக்கிய தகவல்கள்.

எபோலா' உயிர்கொல்லி வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடத்தில் மிகப் பெரும் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் இன்று வரையில் சுமார் 900க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் முதலில் 1976ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளார்கள். இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமே தவிர இதனை அடியோடு அழித்துவிட முடியாது. இது எயிட்ஸை விட பல மடங்கு பேராபத்து தரக்கூடிய வைரஸாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1976ஆம் ஆண்டு இந்த வைரஸ் சியாராலியோன் மற்றும் சூடான் நாட்டில் பரவிய போது தொற்றுக்குள்ளாகிய அனைவரும் இறந்து போனார்கள்.