உணவு அருந்தும் முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவு அருந்தும் முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரவு லேட்டா சாப்பிட்டா ஞாபக சக்தி குறையும்.

இரவு வெகுநேரம் கழித்து சாப்பிடுவோருக்கு ஞாபக சக்தி குறைவதாக, கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் கிறிஸ்டோபர் கால்வெல் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

இதற்காக, வழக்கமான நேரத்தில் சாப்பிட்டு, தூங்கும் சுண்டெலி ஒன்றின், உணவு நேரம் மாற்றப்பட்டது. அதன் பின்னரும், சுண்டெலியிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை.

அதன் தூக்கம், எடை உள்ளிட்டவை சீராக இருந்தன. ஆனால், அதற்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு பொருளை காண்பித்த போது, அதை உடனடியாக அடையாளம் காண முடியாமல், சுண்டெலி தயங்கி நின்றது.

பசியின்மையை போக்கும் சில வழிகள்.

ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் 'பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய சில டிப்ஸ் உங்களுக்காக,

உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும்மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும்உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

உணவருந்தும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

*சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.

*நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

*தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.

*எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.