உடல் எடையை குறைக்கும் வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் எடையை குறைக்கும் வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உடல் எடையை குறைப்போருக்கான சில அறிவுரைகள்.

அதீத எடை என்பது ஒரு உலகளாவிய பிரச்சனையாகிவிட்டது. மேற்கத்தைய நாடுகளில் மட்டும் பேசப்பட்ட இவ்விடயம் இப்பொழுது ஆசிய நாடுகளிலும் தனது அழுக்கு முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

அதீத எடையின் விளைவுகளும் குறைக்கும் வழிகளும்
எடை அதிகரிப்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதயநோய்கள், எலும்பு மூட்டுத் தேய்வுகள், போன்ற பல நோய்கள் வரும் என்பதை இப்பொழுது பலரும் உணர்கிறார்கள்.உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம் என்ற உணர்வு மேலாங்கி வருகிறது.

காலையில் வீதிகளிலும் கடற்கரை ஓரங்களிலும் நடைப் பயிற்சி செய்பவர் எண்ணிக்கை அதிகரிப்பிலிருந்து இதனை அறிய முடிகிறது.இளவயதினர் பெரும்பாலும் உடற்பயிற்சி நிலையங்களை நாடுகிறார்கள்.

வாக்கிங் முடித்ததும் சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா?

ஒருவர் "தினமும் வாக்கிங் போகிறேன். வாக்கிங் போய் வந்தவுடனே நன்றாகப் பசிக்கிறது. உடனே சாப்பிடாவிட்டால் சோர்வாகி விடுகிறேன். நடைப்பயிற்சி முடிந்தவுடன் சாப்பிடுவதால் எடை அதிகரிக்குமா?"என கேட்பார் என்றால்;

உடலில் உள்ள கலோரிகள் நடைப்பயிற்சி செய்யும்போது கரையும். இதனால்தான் பசியெடுக்கிறது. இந்த நேரத்தில் அதிகமான கலோரி கொண்ட உணவை சாப்பிட்டால் நிச்சயம் எடை அதிகரிக்கும். சராசரி எடை, உயரம் உள்ள ஒருவருக்கு தினம் 2,400 கலோரி போதுமானது. இதை மனதில் கொண்டு சாப்பிடுங்கள். வாக்கிங் முடிந்து வரும்போது ஜூஸ், மோர் போன்றவற்றை அருந்தலாம்.

உடற்பயிற்சி இல்லாமல் உடலை மெலிய வைக்க முடியுமா?

யாருக்கெல்லாம்  உடல் மிகவும் அழகாக ஸிலிம்மாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக தங்கள் உண்ணும உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக  வைத்துக் கொள்வது என்பது மிகவும் சுலபமான  விஷயம் அல்ல.அதற்காக எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றில்லை. அனைத்தையும் சாப்பிடலாம் ஆனால் சில கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

அதிலும் சரியான டயட்டை மேற்கொள்ளாமல் இருந்தால், முகம் வாடி, உடல் வாடி உடலில் செரிமானம் குறைந்து குடலானது சுருங்கிவிடும்.
ஆகவே ஆரோக்கியமான உடலையும்  அழகான சருமத்தை பெற வேண்டுமென்றால், நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும்.

உடற்பருமனை இலகுவாக குறைக்கும் வழிகள்.

உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை:

* தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

* கூல் ட்ரிங்ஸ்சுக்கு தடை  விதிக்க வேண்டும்.

* எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்.

தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்.

ஆம், எப்போதும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், உடல் மிகவும் சோர்வடைவிடும். இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, பல உடல்நலப் பிரச்சனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும்.