இஷாரா நாயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஷாரா நாயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டப்பிங் பேசுவதற்கு அடம் பிடிக்கின்றாராம் இஷாரா நாயர்!!

சினிமாவில் நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு பிறகும் அனுஷ்கா, திரிஷா, தமன்னா, நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் டப்பிங் பேசுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான பப்பாளி, வெண்மேகம், சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ள இஷாரா நாயர் முதல் படத்தில் இருந்தே எனக்கு நானேதான் டப்பிங் பேசுவேன் என்று அடம் பிடித்து வந்தாராம்.

காரணம், இவரது தாய்பூமி கேரளாவாக இருந்தபோதும், இவர் படித்து வளர்ந்ததெல்லாம் கோவைதானாம். அதனால் எனக்கு சுத்த தமிழ் பேசத் தெரியும் என்று முதல் படத்தில் கமிட்டானபோதே சொன்னாராம். ஆனால் அவரது குரலை கேபிஎஸ் சாயலில் இருப்பதாக சொல்லி பப்பாளி, வெண்மேகம் படங்களில் அவரை டப்பிங் பேச விடாமல் செய்து விட்டார்களாம்.