இரத்த சோகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரத்த சோகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்: இரத்தசோகை காரணமா?

இரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபினின் அடர்த்தி குறைவதே இரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. இந்த இரத்தசோகையினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இரும்பு சத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சோர்வடைந்து விடுகிறது. மேலும் மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன.

 இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்தசோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது. இரத்தசோகையின் அறிகுறிகள்

1. மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.
 2. சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு, உணவு செரிமானமாகாமல் இருத்தல், உடல் வெளுத்துக் காணப்படுதல்.

பெண்களுக்கு வரும் தசைச்சுற்றலுக்கான காரணங்கள்.

தசைச்சுற்றல் ஒரு வியாதி அல்ல. இது ஒரு நோயின் அறிகுறி. உங்கள் உடல் உங்களோடு ஒத்துப்போகவில்லை என்பதை காட்டும் ஓர் அறிகுறியே தலைச்சுற்றல். உடலுக்கு பிடிக்காத, உடல் ஏற்றுக் கொள்ளாத ஒரு காரியத்தை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தம். தலைச்சுற்றலின் போது சுயநினைவு இருக்கும். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரியும். சுயநினையை இழப்பது மயக்கம்.. தலைச்சுற்றல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.